/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீபாவளிக்கு அரிசி, சர்க்கரை வழங்க ரேஷன் கடைகள் தயார்
/
தீபாவளிக்கு அரிசி, சர்க்கரை வழங்க ரேஷன் கடைகள் தயார்
தீபாவளிக்கு அரிசி, சர்க்கரை வழங்க ரேஷன் கடைகள் தயார்
தீபாவளிக்கு அரிசி, சர்க்கரை வழங்க ரேஷன் கடைகள் தயார்
ADDED : அக் 08, 2024 03:13 AM

புதுச்சேரி: தீபாவளி பண்டிகைக்கான இலவச அரிசி, சர்க்கரை வழங்க ரேஷன் கடைகள் திறந்து சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கும் பணி கடந்த 7 ஆண்டிற்கு முன்பு நிறுத்தப்பட்டது. அரிசிக்கான பணம் குடும்ப தலைவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்கள் ரேஷன் கடைகள் திறந்து மீண்டும் அரிசி வழங்க கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து ரேஷன் கடை திறந்து, அரிசி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார். முதற்கட்டமாக தீபாவளிக்கு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ இலவச அரிசி 15 நாட்களில் வழங்கப்படும், ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒருமாத சம்பளம் வழங்க ரூ. 1.45 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
இத்தகவலைத் தொடர்ந்து, ரேஷன் கடைகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் கூட்டுறவு சங்கம் மூலம் 327 ரேஷன் கடைகளும், பாப்ஸ்கோ மூலம் 37 கடைகள், தனியாரிடம் 17, மற்ற சங்கங்கள் மூலம் 4 கடைகள் இயங்கி வருகிறது.
காரைக்காலில் 70 கடைகள் கூட்டுறவு சங்கம் மூலமும், 10 பாப்ஸ்கோ கடைகளும், 8 தனியாரிடமும், 2 பிற சங்கங்கள் மூலம் இயங்குகிறது. ஏனாமில் 22, மாகியில் 18 கடைகள் கூட்டுறவு சங்கம் மூலம் செயல்பட்டு வருகிறது.
இலவச அரிசி மற்றும் சர்க்கரை வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதிக்குள் சர்க்கரை மற்றும் அரிசி ரேஷன் கடைகளுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கடைகளை சுத்தம் செய்து எடை மிஷின்களை தயாராக வைக்க கூட்டுறவு சங்கம் உத்தரவிடப்பட்டது. அதன்படி ரேஷன் கடை ஊழியர்கள் கடைகளை சுத்தம் செய்து மிஷின்களை தயார் செய்து அதனை புகைப்படமாக எடுத்து, சொசைட்டி நிர்வாகிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.