/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் கலெக்டராக ரவிபிரகாஷ் பொறுப்பேற்பு
/
காரைக்கால் கலெக்டராக ரவிபிரகாஷ் பொறுப்பேற்பு
ADDED : ஆக 19, 2025 07:42 AM

காரைக்கால் : காரைக்கால் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்ட ரவி பிரகாஷ் நேற்று பொறுப்பேற்றார்.
அப்போது அவர் கூறுகையில், புதுச்சேரியில் பி.சி.எஸ்., அதிகாரியாக பணிபுரிந்து பின்னர் ஐ.ஏ.எஸ்.,பதவி உயர்வு பெற்று தற்பொழுது காரைக்கால் கலெக்டராக பொறுப்பேற்றுள்ளேன். மக்களின் தேவையறிந்து திட்டங்களை செயல்படுத்தவும், மக்களுக்கு வெளிப்படையான நிர்வாகத்தை கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிகாரிகள், பொதுமக்களிடம் நேர்மையாகவும், கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். மக்களின் தேவைகளை உணர்ந்து அவற்றை நிறைவேற்ற வேண்டும். பொதுமக்கள் எந்த நேரமும் பொது பிரச்னைகளை என்னிடம் தெரிவிக்கலாம் என்றார். கலெக்டராக பொறுப்பேற்ற ரவி பிரகாஷிற்கு, துணை கலெக்டர்கள் அர்ஜுன் ராமகிருஷ்ணன், செந்தில்நாதன்,வெங்கட கிருஷ்ணன், உள்ளாட்சித்துறை துணை இயக்குனர் சுபாஷ், செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குனர் குலசேகரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.