/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருநள்ளாறு கோவிலில் ரவிசங்கர் சுவாமி தரிசனம்
/
திருநள்ளாறு கோவிலில் ரவிசங்கர் சுவாமி தரிசனம்
ADDED : மே 02, 2025 07:12 AM

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில், வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் தரிசனம் செய்தார்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரில், உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், தனி சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவிலுக்கு நேற்று, வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் வருகை தந்தார். அவரை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் வரவேற்றார். பின், தர்பாரண்யேஸ்வரர், முருகன், விநாயகர். அம்பாள் உள்ளிட்ட சன்னதிகளில் ரவிசங்கர் சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து, சனீஸ்வர பகவான் சன்னதியில் எள் தீபம் ஏற்றி, சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.
செய்தித்துறை உதவி இயக்குனர் குலசேகரன், எஸ்.பி.சுப்ரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முன்னதாக, தனி ஹெலிகாப்டர் மூலம் வரிச்சிக்குடி பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் வந்திறங்கிய ரவிசங்கருக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் துணை கலெக்டர் செந்தில்நாதன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

