தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் பணி ராஜினாமா செய்தார் ரவிக்குமார்

 கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் பணி ராஜினாமா செய்தார் ரவிக்குமார்

 கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் பணி ராஜினாமா செய்தார் ரவிக்குமார்


ADDED : பிப் 24, 2026 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 04:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து டேட்டா என்டரி ஆப்ரேட்டர் பதவியை ராஜினாமா செய்தார் ரவிக்குமார்.

வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த 1999ம் ஆண்டு ஊழியராக பணியில் ரவிக்குமார் சேர்ந்தார். பின்னர் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டராக பதவி உயர்வு பெற்றார். பல வருடங்களாக இவரது மனைவி மோகித் கன்ஸ்ட்ரக்ஷன் பெயரில் பல்வேறு கட்டுமான பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் அரசு ஊழியராக இருந்து கொண்டே மோகித் ரவிக்குமார் என்ற பெயரில் சமூக சேவையில் ஈடுபட்டு மங்கலம், வில்லியனுார் மற்றும் ஊசுடு தொகுதியில் ஏழை எளிய மக்க ளுக்கு பல நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை, நோயாளிகளுக்கு சிகிச்சை செலவு என பல உதவிளை செய் ததால், அரசியல் ரீதியாக பல பிரச்னைகளையும், வழக்குகளையும் சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தனது தாயார் மறைவுக்கு பிறகு காமாட்சி அம்மாள் அறக்கட்டளை துவங்கி மங்கலம் தொகுதி முழுவதும் நலத்திட்ட உதவிகள் செய்துவருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட, அரசு பணி ஒரு தடையாக இருப்பதால், நேற்று முறைப்படி தனது அரசு பணியை ராஜினாமா செய்தார். தகவலறிந்து திரண்ட ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us