தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நுாலகத்தில் படித்த வாசகர் சுருண்டு விழுந்து சாவு

நுாலகத்தில் படித்த வாசகர் சுருண்டு விழுந்து சாவு

நுாலகத்தில் படித்த வாசகர் சுருண்டு விழுந்து சாவு


ADDED : அக் 26, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: நுாலகத்தில் படித்துக் கொண்டிருந்த வாசகர், நெஞ்சு வலியால் சுருண்டு விழுந்து இறந்தார்.

புதுச்சேரி, அரியாங்குப்பம், கம்பன் நகரை சேர்ந்தவர் தேவநாதன்,42; இவர் இன்று (அக்.,26) மதியம், கடலுார் மத்திய நுாலகத்தில் நாளிதழ்கள் படித்து கொண்டிருந்தபோது, திடீரென நாற்காலியில் இருந்து நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தார்.

உடன், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார்.

இதுகுறித்து கடலுார் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us