/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை
/
கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை
கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை
கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை
ADDED : ஜன 06, 2024 06:42 AM
புதுச்சேரி, : புதுச்சேரி கடற்கரை சாலையில், கண்டன கழிப்பிடத்தில் அடாவடியாக ரூ. 30 வசூலித்ததால் வசூல் உரிமத்தை ரத்து செய்ய நகராட்சி பரிந்துரை செய்துள்ளது.
புதுச்சேரி கடற்கரை வரும் சுற்றுலா பயணிகள் அவசரத்திற்காக, பழைய சாராய ஆலை மற்றும் டூப்ளக்ஸ் சிலை, நேரு சிலை அருகே நகராட்சியின் கட்டண கழிப்பறை உள்ளது.
இவற்றை பயன்படுத்த ரூ.5 மற்றும் ரூ.10 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், கடந்த 3ம் தேதி புதுச்சேரி வந்த தமிழக ஆன்மிக பக்தர்களிடம், கடற்கரை சாலை பழைய சாராய ஆலை அருகில் உள்ள கட்டண கழிப்பறையில் இருந்த ஊழியர், ரூ. 30 அடாவடியாக வசூலித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள், ஊழியரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, கடற்கரை சாலை பழைய சாராய ஆலை அருகில் உள்ள நகராட்சி கட்டண கழிப்பிடத்தில், கட்டணம் வசூலிக்கும் உரிமம் ரத்து செய்ய புதுச்சேரி நகராட்சி நிர்வாகம், உள்ளாட்சி துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.