/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சின்ன மணிக்கூண்டை புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு
/
சின்ன மணிக்கூண்டை புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு
சின்ன மணிக்கூண்டை புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு
சின்ன மணிக்கூண்டை புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு
ADDED : அக் 28, 2024 05:32 AM

புதுச்சேரி : புனரமைக்கப்பட்ட பிரெஞ்சு காலத்து மணிகூண்டை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
புதுச்சேரி புஸ்சி வீதியில் உள்ள சின்ன மணிக்கூண்டு பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. சுற்றுலா பயணிகள் இந்த மணிக்கூண்டின் முன் நின்று புகைப்படம் எடுத்து செல்வது வழக்கம்.
பொலிவிழந்து காணப்பட்ட மணிகூண்டினை சீரமைக்க வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி புதுச்சேரி நகராட்சிக்கு கோரிக்கை வைத்தார். தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6 லட்சம் 5 ஆயிரம் செலவில் மணிக்கூண்டை புனரமைக்கப்பட்டது.
பணிகள் முடிந்த நிலையில் இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பயன்பாட்டிற்குஅர்ப்பணித்தார்.
மணிகூண்டு கடிகாரம் காலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மணிக்கு ஒருமுறை, திருக்குறள் ஒன்றை பொருளுடன் கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிக்காக புஸ்ஸி மார்கெட் வியாபாரிகள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏவிற்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற் பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் சண்முகம், பணி ஆய்வாளர் வெங்கட பரமானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டார்.