/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருபுவனை துணை மின் நிலையம் ரூ.1.4 கோடியில் புனரமைக்கும் பணி
/
திருபுவனை துணை மின் நிலையம் ரூ.1.4 கோடியில் புனரமைக்கும் பணி
திருபுவனை துணை மின் நிலையம் ரூ.1.4 கோடியில் புனரமைக்கும் பணி
திருபுவனை துணை மின் நிலையம் ரூ.1.4 கோடியில் புனரமைக்கும் பணி
ADDED : டிச 04, 2025 05:12 AM

திருபுவனை: திருபுவனை துணை மின் நிலையத்தை பொதுப்பணித் துறையின் சார்பில், ரூ.1.4 கோடிசெலவில் புனரமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., நேற்று தொடங்கி வைத்தார்.
திருபுவனையில் உள்ள 110 கிலோ வாட்ஸ் துணை மின் நிலையத்தின் ஆர்.சி.சி., துாண்கள் பழுதடைந்து பலவீனமான நிலையில் இருந்தது.
இதையடுத்து, தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் நடவடிக்கையின் பேரில், புதுச்சேரி அரசு பொதுப்பணி துறை சார்பில், ரூ.75.15 லட்சம் செலவில் துணை மின் நிலையத்தில்ஆர்.சி.சி., துாண்களை புனரமைக்கும்பணி மற்றும் ரூ.29.35 லட்சம் செலவில் சுற்று மதில் சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. அங்காளன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை தெற்கு கோட்ட செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் ஜலில், இளநிலை பொறியாளர்கள் நிர்மல்ராஜ், கிருஷ்ணன், மின்துறை உதவிப்பொறியாளர் பன்னீர்செல்வம், ஒப்பந்ததாரர்கள் பூபாலன், பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர்கள் பழனிவேல், கோகுல், உதய ஆதித்யன், ஜே.சி.எம்., மக்கள் மன்ற திருபுவனை தொகுதி தலைவர் ரவிக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

