/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரசிடென்சி பள்ளி கேரம் போட்டியில் சாதனை
/
பிரசிடென்சி பள்ளி கேரம் போட்டியில் சாதனை
ADDED : பிப் 05, 2025 06:10 AM

புதுச்சேரி: மாநில அளவிலான கேரம் போட்டியில், பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
புதுச்சேரி மாநில முதல்வர் கோப்பைக்கான, 17ம் ஆண்டு மாநில அளவிலான கேரம் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மொத்தம், 480 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் ரெட்டி யார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த சத்ய பிரகாஷ் முதல் பரிசும், திவ்யா இரண்டாம் பரிசும் மற்றும் ஸ்ரீராம் மூன்றாம் பரிசும் பெற்றனர். இதேபோல பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த, 8ம் வகுப்பு மாணவர்கள் ரித்விக் மூன்றாம் பரிசு பெற்றார்.
அதே வகுப்பை சேர்ந்த அனுஷ்டி, முகமது தவுபிக், கவுதம், 7ம் வகுப்பு மாணவர்கள் மோனிஷ், நிஷாந்தன், 5ம் வகுப்பு மாணவர் தனுஷ்டி ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர்.
பரிசு பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கிறிஸ் டிராஜ், பள்ளி முதல்வர் ஜெயந்தி ராணி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.