தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி துறைமுகத்திற்கு புத்துயிர்!வல்லுநர் குழு கள ஆய்வு

புதுச்சேரி துறைமுகத்திற்கு புத்துயிர்!வல்லுநர் குழு கள ஆய்வு

புதுச்சேரி துறைமுகத்திற்கு புத்துயிர்!வல்லுநர் குழு கள ஆய்வு


UPDATED : செப் 24, 2026 07:10 PM

ADDED : செப் 24, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2026 07:10 PM ADDED : செப் 24, 2026 06:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி துறைமுகத்தினை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக துறைமுக வல்லுநர் குழு புதுச்சேரியில் முகாமிட்டு ஆய்வு செய்து வருகிறது.

புதுச்சேரி உப்பளத்தில் அமைந்துள்ள புதிய துறைமுகம் கடந்த 1994-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் சுறுசுறுப்பாக இயங்கிய இத்துறைமுகத்தில், 2006-ம் ஆண்டு வரை 35,883 டன் சரக்குகள் கையாளப்பட்டன. இருப்பினும், அதன் பிறகு போதிய பராமரிப்பின்மை மற்றும் இயற்கையான தடைகளால் எந்தவொரு கப்பலும் இத்துறைமுகத்திற்கு வரவில்லை. இதனால் சொல்லிக்கொள்ளும்படி பெரிய அளவிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகம் முற்றிலும் முடங்கிப்போனது.

-

முயற்சியும் தோல்வியும்...

கைவிடப்பட்ட நிலையில் இருந்த புதுச்சேரி துறைமுகத்திற்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கில், புதுச்சேரி அரசு சென்னை துறைமுகத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி சென்னை துறைமுகத்திற்கு வரும் பெரிய சரக்குக் கப்பல்களில் உள்ள கன்டெய்னர்கள், பார்ஜ் எனப்படும் சிறிய மிதவை கப்பல்கள் மூலம் கடல் மார்க்கமாக புதுச்சேரிக்குக் கொண்டு வரவும், இங்கிருந்து சாலை மார்க்கமாகத் தேவைப்படும் பிற பகுதிகளுக்குப் பிரித்து அனுப்ப திட்டமிடப்பட்டது.இருப்பினும், இதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகள் மிக வேகமாகத் தொடங்கப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களால் அதே வேகத்தில் பணிகள் பாதியிலேயே முடங்கின.

--

வல்லுநர் குழு

தற்போது இத்துறைமுகத்தை மீண்டும் முழுமையாக இயங்க வைக்க புதுச்சேரி அரசு புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. புதுச்சேரி அரசின் அழைப்பை ஏற்று, இந்திய துறைமுகங்கள் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் யதின் பாட்டில் தலைமையிலான உயர் மட்ட வல்லுநர் குழு புதுச்சேரி வந்துள்ளது.சட்டசபை வளாகத்தில் இக்குழுவினர் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் அவர்களை நேரில் சந்தித்துப் ஆலோசனை நடத்தினர். இச்சந்திப்பின் போது, புதுச்சேரி துறைமுகத்தின் தற்போதைய நிலவரம். துறைமுகத்தை மீண்டும் திறக்க அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு நடவடிக்கைகள்.ஆகியவை குறித்துத் துறைமுக இயக்குநர் மோகன் குமார் விரிவாகப் பட்டியலிட்டு விளக்கினார்.இதனைத் தொடர்ந்து, வல்லுநர் குழுவினர் புதுச்சேரி துறைமுகப் பகுதிக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள கிடங்குகளின் தரம், சரக்குப் போக்குவரத்திற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவது தொடர்பான அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்தனர். இக்குழுவினர் தொடர்ந்து இரண்டாவது நாளாகன்றும் துறைமுகப் பகுதியில் தீவிர கள ஆய்வைத் தொடர்கின்றனர்.-நிதி தான் பிரச்னை புதுச்சேரி துறைமுகத்தில் நிலவும் மிகப்பெரிய சவால், முகத்துவாரப் பகுதியில் அடிக்கடி மணல் மேடாகி தூர்ந்து போய்விடுவது தான். இதனால் ஆழம் குறைந்து, கப்பல்கள் வந்து செல்வதில் தொடர் சிக்கல் நீடித்து வருகிறது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும் மத்திய அரசின் புதிய திட்டத்தைப் பயன்படுத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.

-

குரூஸ் பாரத் மிஷன் தீர்வாகுமா..

இந்தியாவில் கடல்வழி மற்றும் உள்நாட்டு நதிவழி சொகுசு கப்பல் சுற்றுலாவை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சகத்தால் 2024-ம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. 2029-ஆம் ஆண்டு வரை மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின்கீழ், மத்திய அரசிடமிருந்து போதிய நிதியுதவி பெற்று புதுச்சேரி துறைமுகத்தை சர்வதேசத் தரத்தில் மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் நிதியுதவியுடன் துறைமுகத்தைத் தூர்வாரி மேம்படுத்தினால், சரக்குப் போக்குவரத்து மட்டுமன்றி, சுற்றுலா சொகுசு கப்பல்களையும் புதுச்சேரியை நோக்கி ஈர்க்க முடியும் என அரசு நம்புகிறது. வல்லுநர் குழுவின் இந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன், புதுச்சேரி துறைமுக மறுசீரமைப்புப் பணிகள் புதிய பரிமாணத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us