தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இளம்பெண் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

இளம்பெண் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

இளம்பெண் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்


UPDATED : ஜூலை 18, 2026 04:22 PM

ADDED : ஜூலை 18, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 18, 2026 04:22 PM ADDED : ஜூலை 18, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அப்பெண்ணை காதலித்த வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு, பெரியபேட்டை சேர்ந்தவர் பால்ராஜ், கூலி தொழிலாளி. பட்டதாரியான இவரது மகள் ஸ்ரீலேகா,24; நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து, ஸ்ரீலேகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், ஸ்ரீலேகா அதே கிராமம் சின்னபேட்யை சேர்ந்த வாலிபர் ஒருவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், அவர் திருமணம் செய்ய மறுத்ததால் தான் ஸ்ரீலேகா தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10 மணிக்கு மண்ணாடிப்பட்டு சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஸ்ரீலேகாவை காதலித்து ஏமாற்றியதுடன், தற்கொலைக்கு துாண்டிய அந்த வாலிபர் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, போலீசார் ஸ்ரீலேகா காதலித்தாக கூறப்படும் வாலிபரை பிடித்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்தனர். இதையேற்று உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக மண்ணாடிப்பட்டு - வாதானுார் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us