/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்டாக் காலியிடங்கள் குறித்த விவரம் வெளியீடு
/
சென்டாக் காலியிடங்கள் குறித்த விவரம் வெளியீடு
ADDED : அக் 26, 2024 05:46 AM
புதுச்சேரி: சென்டாக்கில் காலி இடங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி சென்டாக் இணையதளத்தில் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய படிப்புகளுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத்தவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் காலி பணியிடங்கள் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு ஒதுக்கீட்டில் பல் மருத்துவம்-15 இடங்களும், ஆயுர்வேதம்-6 இடங்களும் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்.-10 இடங்களும், பல் மருத்துவம்- 37 இடங்களும், ஆயுர்வேதம்-2 இடங்களும் உள்ளன. மேலும் அரசு, நிர்வாகம் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான காலி இடங்களுக்கு வரும் 28 ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் அல்லாத படிப்புகளுக்கு மாப் அப்பில் இடம் கிடைத்தவர்களில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் நீட் அல்லாத சிறப்பு கலந்தாய்வில் இடம் கிடைத்த மாணவர்கள் வருகிற 29-ந் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.