ADDED : பிப் 26, 2024 05:08 AM

புதுச்சேரி: புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் 'தமிழோடும் இசையோடும்' என்ற ஆவணப்படத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளியிட்டார்.
புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் பத்மநாபன். இவருக்கு சமீபத்தில் சென்னை மியூசிக் அகாடமியின் சார்பில், தமிழிசை ஆய்வறிஞர் விருது வழங்கப்பட்டது.
இவரது வாழ்க்கைப் பின்னணியில் 'தமிழோடும் இசையோடும்' என்ற ஆவணப்படம் ராஜமாணிக்கம் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இதன் வெளியீட்டு விழா புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் நடந்தது.
ஆவணப்படத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளியிட்டார். நிகழ்வில் பத்மநாபன், கலைப் பண்பாட்டு துறை இயக்குநர் கலியபெருமாள், பேராசிரியர் கிருங்கை சேதுபதி, ஜெகதீசன் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சங்கீத சலங்கை நாட்டியாலயா நிறுவனம் செய்திருந்தது.
