/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீட்டின் மீது சாய்ந்த மரம் அகற்றம்
/
வீட்டின் மீது சாய்ந்த மரம் அகற்றம்
ADDED : நவ 25, 2025 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வீட்டின் மீது சாய்ந்த மரத்தை, தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால், புதுச்சேரியில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வைசியாள் வீதியில், இருந்த வேப்ப மரம், நேற்று காலை 11:30 மணியளவில் அருகில் உள்ள ஒரு வீட்டின் மீது திடீரென சாய்ந்தது.
தகவலறிந்த, புதுச்சேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, மரத்தை அகற்றினர்.
மரம் சாய்ந்த போது, அவ்வழியாக யாரும் வராததால், பாதிப்பு இல்லை. இதனால், அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

