/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இ.சி.ஆர்., மின் கம்பத்தில் இருந்த பேனர்கள் அகற்றம்
/
இ.சி.ஆர்., மின் கம்பத்தில் இருந்த பேனர்கள் அகற்றம்
இ.சி.ஆர்., மின் கம்பத்தில் இருந்த பேனர்கள் அகற்றம்
இ.சி.ஆர்., மின் கம்பத்தில் இருந்த பேனர்கள் அகற்றம்
ADDED : பிப் 29, 2024 05:42 AM

புதுச்சேரி: இ.சி.ஆர்., சாலையில் மின் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த விளம்பர பேனர்களை பொதுப்பணித்துறை ஊழியர்கள் அதிரடியாக அகற்றினர்.
புதுச்சேரியில் நகர பகுதியில் முக்கிய இடங்களில் பேனர்கள் வைக்கப்படுவதால் விபத்துக்கள் நடந்து வருகிறது. முக்கிய சிக்கனல் பகுதியில் பேனர்கள் வைக்கப்படுவதால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.பேனர்களை அகற்ற வேண்டும் என, நகராட்சி, போக்குவரத்துத்துறை, பொதுப்பணித்துறையினருக்கு தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளது.
அதையடுத்து, இ.சி.ஆர்., கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபம் அருகில், மின் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த விளம்பர பேனர்களை பொதுப்பணித்துறை ஊழியர்கள் நேற்று அதிரடியாக அகற்றினர்.