காரைக்கால் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
காரைக்கால் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ADDED : ஏப் 20, 2026 11:10 PM

அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி நடந்தது.
காரைக்கால், கோவில்பத்து பகுதியில் உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
பஸ் நிலையத்தில் நகராட்சி அனுமதிக்கப்பட்ட இடத்திற்கு மேல் பொதுஇடத்தில் கடைகள் ஆக்கிரமிப்பு செய்யதுள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, நகராட்சி ஆணையர் சுபாஷ் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பஸ் நிலையத்திற்கு நேற்று சென்று, பொது இடத்தில் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற உத்தரவிட்டனர். அதையடுத்து, பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுப்பட்டனர்.
