/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மடுகரையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
மடுகரையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : நவ 21, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: மடுகரை பஸ் நிலையம் ஓரம் கடைகள் வைத்துள்ளவர்கள் ெஷட், கடை பேனர்கள் வைத்து ஆக்கிரமித்ததால் பஸ்கள் செல்ல முடியாமல் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் முன்னிலையில் நேற்று காலை மடுகரை பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது.
நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீரத்தி வர்மன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். பொதுப்பணித்துறை பொறியாளர் கிருஷ்ணன், செயற்பொறியாளர் ராமலிங்கேஸ்வரராவ், வருவாய் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.