/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வழுதாவூர் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
வழுதாவூர் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : அக் 26, 2024 06:23 AM

புதுச்சேரி: வழுதாவூர் சாலையில் அக்கார்டு முதல் மேட்டுப்பாளையம் வரை சாலையோர ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றினர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. முக்கிய சாலைகளிலும் வாகனங்கள் அதிக அளவில் செல்கிறது.
சாலையை ஆக்கிரமித்து நடத்தும் வியாபாரம், நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால் சாலையில் கடும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.
இதனால், சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா உத்தரவின்பேரில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யவும், குற்ற சம்பவங்களை தடுக்க கோரிமேடு டி நகர் போலீசார், வழுதாவூர் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
எஸ்.பி., வீரவல்லபன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், கோவிந்தன், வெங்கடேசன் தலைமையிலான போலீசார், அக்கார்டு ஓட்டல் துவங்கி மேட்டுப்பாளையம் சந்திப்பு வரை சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பேனர்கள் அகற்றியதுடன், நிரந்தரமாக நிறுத்தியிருந்த பைக்குகளை அப்புறப்படுத்தினர். சாலையை ஆக்கிரமித்து மீண்டும் கடை அமைத்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்தனர்.