/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிள்ளையார்குப்பம் சந்திப்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
பிள்ளையார்குப்பம் சந்திப்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பிள்ளையார்குப்பம் சந்திப்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பிள்ளையார்குப்பம் சந்திப்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : நவ 13, 2024 06:22 AM

பாகூர் : புதுச்சேரி - கடலுார் சாலை பிள்ளையார்குப்பத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
புதுச்சேரி - கடலுார் சாலை பிள்ளையார்குப்பம் சந்திப்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன் தலைமையில், பொதுப்பணித்துறை, கொம்யூன் பஞ்சாயத்து, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், போலீஸ் பாதுகாப்புடன் சாலை மற்றும் கழிவு நீர் வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பெட்டி கடைகள், பெயர் பலகைககள், ஆட்டோ ஸ்டேண்டு, பூங்கா உள்ளிட்டவற்றை ஜெ.சி.பி., மற்றும் கிரேன் மூலமாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இப்பணிகளை, தெற்கு மாவட்ட துணை ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் கொட்டாரு, புதுச்சேரி போக் குவரத்து போலீஸ் சீனியர் எஸ்.பி., பிரவின்குமார் திரிபாதி பார்வையிட்டனர்.