தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கிருமாம்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 கிருமாம்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 கிருமாம்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ADDED : ஜூன் 15, 2026 10:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 10:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: புதுச்சேரி - கடலுார் சாலை கிருமாம்பாக்கத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள், போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.

புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுவது மட்டுமின்றி, சாலை விபத்துக்களும் நடந்து வருகிறது. இது தொடர்பாக, பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை புதுச்சேரி - கடலுார் சாலை கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனை எதிரில் இருந்து சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பாகூர் கொம்யூன் பஞ்சாய்த்து ஆணையர் சதாசிவம், துணை தாசில்தார் தினேஷ், பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு உதவி பொறியாளர் சிவப்பிரகாசம், இளநிலை பொறியாளர்கள் கிருஷ்ணகுமார், மணிவண்ணன், மின் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், போலீசார் பாதுகாப்புடன் சாலையோரத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த டிபன் கடை, ஜூஸ் கடை, பெட்டி கடை, விளம்பர பலகைகளை ஜெ.சி.பி.,கிரேன் மூலமாக அப்புறப்படுத்தினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us