/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமராஜர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
காமராஜர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : நவ 12, 2024 08:02 AM

புதுச்சேரி: காமராஜர் சாலை ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் நேற்று அகற்றினர்.
புதுச்சேரியில் சாலையில் பெருகி வரும் ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதனையொட்டி, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார்.
அதன்படி, கடந்த 4ம் தேதி முதல் புதுச்சேரி முழுதும், சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, நேற்று காமராஜர் சாலையில் பெரியார் சிலை முதல் ராஜிவ் சதுக்கம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
தாசில்தார் பிரதீவ் முன்னிலையில் நகராட்சி ஆணையர்கள் கந்தசாமி, சுரேஷ்ராஜ், பொதுப்பணித் துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன், சாலையின் இருபுறமும் இருந்த கடைகள், பெயர் பலகை, விளம்பர போர்டுகள், சிமென்ட் கட்டைகளை பொக்லைன் இயந்திரங்களை கொண்டு அகற்றினர். இடித்து அகற்றப்பட்ட பொருட்களை, நகராட்சி அதிகாரிகள் லாரியில் ஏற்றிச் சென்றனர்.
அப்போது, வியாபாரிகள் சிலர் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.