/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாகூர் கல்லுாரி வளாகத்தில் விழுந்த மரங்கள் அகற்றம்
/
தாகூர் கல்லுாரி வளாகத்தில் விழுந்த மரங்கள் அகற்றம்
தாகூர் கல்லுாரி வளாகத்தில் விழுந்த மரங்கள் அகற்றம்
தாகூர் கல்லுாரி வளாகத்தில் விழுந்த மரங்கள் அகற்றம்
ADDED : டிச 19, 2024 06:40 AM

புதுச்சேரி: தாகூர் கல்லுாரி வளாகத்தில் விழுந்த மரங்களை கல்லுாரி நிர்வாகம் வெட்டி அகற்றியது.
புயல் காரணமாக புதுச்சேரியில் ஏராளமான மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதேபோன்று பசுமை வளாகமாக விளங்கிய லாஸ்பேட்டை தாகூர் அரசு கலைக் கல்லுாரி வளாகத்தில், 20க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதில் கல்லுாரியின் அறிவியல் பிரிவு வளாக கட்டடத்தின் மீது பல ஆயிரம் கிலோ எடைக் கொண்ட சிவந்தேனியா மரம் வேரோடு சாய்ந்தது. கட்டடத்தின் மேல் தளம் உள்பட பல இடங்களில் சேதமடைந்தது. சுற்றுச்சுவர் உடைத்து சேதமானது. கல்லுாரி வளாகத்தில் விழுந்த மரங்களை அகற்றக்கோரி கல்லுாரி சார்பில், புதுச்சேரி வனத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை ஆகியவற்றிற்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், மரங்களை யாரும் அகற்றாததால், கல்லுாரி வளாகம் அலங்கோலமாக காட்சியளித்தது.
அதனை தொடர்ந்து கல்லுாரி நிதியில் 7,500 ரூபாயில் மரம் அறுக்கும் இயந்திரம் ஒன்று சொந்தமாக வாங்கப்பட்டு, கல்லுாரி பண்டகக் காப்பாளர், எலக்ட்ரீஷியன், பல்நோக்கு ஊழியர் ஆகியோர் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.