/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையில் விழுந்த மரங்கள் அகற்றம்
/
சாலையில் விழுந்த மரங்கள் அகற்றம்
ADDED : டிச 01, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : வீராம்பட்டினத்தில், சாலையில் விழுந்த இரண்டு மரங்களை தீயணைப்பு படையினர் அப்புறப்படுத்தினர்.
வீராம்பட்டினம் அரசு நடுநிலைப்பள்ளி அருகே நேற்று காலை வீசிய சூறாவளி காற்றில், இரண்டு பெரிய பஞ்சு மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்தன. இது குறித்து தகவலறிந்த
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மரங்களை அப்புறப்படுத்தினர். அதன் பிறகு சாலையில் வாகனங்கள் சென்றன.
மரம் சாயும் போது, அவ்வழியாக எந்த வாகனங்களும் வராததால், யாருக்கும் பாதிப்பில்லை.

