/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : நவ 10, 2024 04:42 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், சாலையோர ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து ஆறாவது நாளாக அகற்றப்பட்டது.
புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் பிரதான சாலைகளில், போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி, விபத்து அபாயமும் பன்மடங்காக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கலெக்டர் குலோத்துங்கன் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.
இதையடுத்து, புதுச்சேரி முழுதும் போக்குவரத்து போலீஸ், பொதுப்பணி, வருவாய், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆகிய பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் இணைந்து கடந்த 4ம் தேதியில் இருந்து ஆக்ரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, நேற்று 6வது நாளாக பொதுப்பணித்துறையினர், சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையின் இருபுறம் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை ஜே.சி.பி., மூலம் இடித்து அகற்றினர்.
பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சாலையில் இரு புறத்திலும் உள்ள ஆக்ரமிப்பு கடைகள், விளம்பர போர்டுகள், அகற்றப்பட்டன.
அகற்றப்பட்ட ஆக்ரமிப்பு பொருட்களை நகராட்சி அதிகாரிகள் லாரியில் ஏற்றி சென்றனர்.