/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரியில் குடியரசு தின விழா
/
தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரியில் குடியரசு தின விழா
தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரியில் குடியரசு தின விழா
தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரியில் குடியரசு தின விழா
ADDED : ஜன 27, 2025 04:51 AM

பெரம்பலுார்: சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுாரியில் 76வது குடியரசு தின விழா நேற்று நடந்தது.
விழாவில் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்கள் நீவாணி, நகுலன் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். பொது மருத்துவத்துறை பேராசிரியர் விஜய் ஆனந்த் வரவேற்றார். டீன் வள்ளி சத்தியமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். சமூக மருத்துவத்துறை பேராசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
விழாவையொட்டி, மருத்துவக் கல்லுாரி, பல் மருத்துவக் கல்லுாரி, செவிலியர் கல்லுாரி மற்றும் துணை மருத்துவக் கல்வி நிறுவன மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
இதில், கல்லுாரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், மருத்துவர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.