தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா

 அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா

 அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா


ADDED : ஜன 27, 2026 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 04:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

பொதுப்பணித்துறை: புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில், தலைமை பொறியாளர் வீரசெல்வம் தேசிய கொடி ஏற்றினார். கண்காணிப்பு பொறியாளர், செயற் பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

நீதிமன்றம்: புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி ஆனந்த் தேசிய கொடி ஏற்றினார். வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் நாராயணகுமார், பொருளாளர் ராஜபிரகாஷ், துணைத் தலைவர் இந்துமதி புவனேஸ்வரி, நுாலக இணைச் செயலாளர் கோவிந்த திருநாவுக்கரசு உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டுறவுத்துறை: கூட்டுறவுத்துறையில் நடந்த விழாவில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இளங்கோவன் தேசிய கொடி ஏற்றினார்.

துணை பதிவாளர்கள், கூட்டுறவு அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.

அரசு எழுதுபொருள் மற்றும் அச்சகத் துறை: புதுச்சேரி அரசு எழுதுபொருள் மற்றும் அச்சகத்துறையில் இயக்குநர் ரங்கநாதன் தேசியக் கொடி ஏற்றினார். முதுநிலை கணக்கு அதிகாரி, கண்காணிப்பாளர்கள், பண்டக கண்காணிப்பாளர், உதவி இயக்குநர், தொழில்நுட்ப பணியாளர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையம்: புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணைய வளாகத்தில், மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணைய நீதிபதி முத்துவேல் தேசிய கொடி ஏற்றினார். ஆணைய உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ரமேஷ், பொது செயலாளர் நாராயணகுமார், வழக்கறிஞர்கள் மரி அன்னா தயாவதி, திலகவதி, அய்யப்பன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நுகர்வோர் குறைதீர்வு ஆணைய பதிவாளர் விஜயா செய்திருந்தார்.

வேல்ராம்பேட் மக்கள் நலச்சங்கம்: வேல்ராம்பேட், மறைமலை நகர் 5வது குறுக்கு தெரு மக்கள் நலச் சங்கம் சார்பில் மூத்த உறுப்பினர் சோமசுந்தரம் தேசிய கொடி ஏற்றினார். சங்கத் தலைவர் கோவிந்தன், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் மனோகரன்,துணை செயலாளர் ராஜலட்சுமி, செயற்குழு உறுப்பினர்கள் சத்தியநாராயணன், பிரபாகரன், அலமேலு பங்கேற்றனர்.

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில், ஆணையர் விநாயகமூர்த்தி தேசிய கொடியேற்றினார். உதவிப்பொறியாளர் நாகராஜன், இளநிலைப்பொறியாளர் சுரேஷ்,மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.

அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில், பாஸ்கர் எம்.எல்.ஏ., தேசிய கொடியேற்றினார். அலுவலக ஊழியர்கள், என்.ஆர்., காங்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஜிப்மர்: ஜிப்மரில், இயக்குநர் வீர்சிங் நேகி தேசிய கொடியேற்றி, குடியரசு தின உரையாற்றினார். விழாவையொட்டி, ஜிப்மர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பேராசிரியர்கள், டாக்டர்கள், மாணவர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

உள்ளாட்சி துறை: புதுச்சேரி உள்ளாட்சித் துறை அலுவலகத்தில், இயக்குநர் ஆதர்ஷ் தேசியக் கொடி ஏற்றினார். துணை இயக்குநர்கள் பாஸ்கர், அருண் அய்யாவு, இயக்குனரின் தனி செயலர் திருநாவுகரசு, உதவி பொறியாளர்கள் விநாயகம், ரவிச்சந்திரன், கண்காணிப்பாளர்கள் கல்யாணி, சுனில், சுகுமார், நேர்முக உதவியாளர் இந்துமதி உட்பட பலர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சதாசிவம் செய்திருந்தார்.காலாப்பட்டு மத்திய சிறையில், சிறைத்துறை ஐ.ஜி., சிவராஜ்மீனா தேசிய கொடியேற்றி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

சிறைவாசிகளின் யோகா சாதனை நிகழ்ச்சி, வில்லியனுார் நாட்டிய சாஸ்திராலியாவின் குருக்கள் உமா, மாதவி மற்றும் மாணவர்களின் பரதநாட்டியம், அவுட் லாஸ்டர் நாட்டிய பள்ளி ஸ்டாலின் குழுவினரின் நடனம், ஷா யோகா பயிற்சி பள்ளி பயிற்சியாளர் சண்முககுமார் குழுவினரின் சாகச நிகழ்ச்சி, போதி கலை குழு ஆனந்த் குழுவினரின் பறை இசையும் நிகழ்ச்சி நடந்தது.

சிறை தலைமை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us