/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவ கல்லுாரியில் குடியரசு தின விழா
/
மருத்துவ கல்லுாரியில் குடியரசு தின விழா
ADDED : ஜன 28, 2026 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: லட்சுமி நாராயணா மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக 77 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் துறைத் தலைவர் பாலகுருநாதன் தலைமை தாங்கி கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மருத்துவக் கல்லுாரி முதல்வர் பமி சிம்கா, செவிலியர் கல்லுாரி முதல்வர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்லுாரி விழாவில் மாணவர்கள் கலைநிழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் பாலாஜி செய்திருந்தார்.

