/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமராஜர் நகர் தொகுதியில் குடியரசு தின விழா
/
காமராஜர் நகர் தொகுதியில் குடியரசு தின விழா
ADDED : ஜன 27, 2025 04:32 AM

புதுச்சேரி : குடியரசு தினத்தை முன்னிட்டு காமராஜர் நகர் தொகுதி சார்பில், தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தொகுதி பொறுப்பாளர் தேவதாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சிறுவர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்கினார். இதேபோல் காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட கவிக்குயில் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்., சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்பட்டது. காங்., துணை தலைவர் தமிழரசி, வார்டு தலைவர் ராஜா, மாவட்ட மகளிர் காங்., தலைவி சித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.

