/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுப்பணித்துறை இளநிலை பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை
/
பொதுப்பணித்துறை இளநிலை பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை
பொதுப்பணித்துறை இளநிலை பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை
பொதுப்பணித்துறை இளநிலை பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை
ADDED : ஜன 20, 2024 06:01 AM
புதுச்சேரி : பொதுப்பணித் துறையில் இளநிலை பொறியாளர் பதவியில் மேற்பார்வையாளர், ஒர்க் அசிஸ்டண்ட்டுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
சம்மேளன கவுரவ தலைவர் பிரேமதாசன் அறிக்கை:
பொதுப்பணித் துறையில் கடந்த நவ., 28ல் வெளியிடப்பட்ட இளநிலை பொறியாளர் பதவிக்கான புதிய நியமன விதி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்பதவிக்கான நியமன விதியில் 85 சதவீதம் நேரடி நியமனம் செய்யும் வகையில் திருத்தப்பட்டுள்ளது.
பழைய நியமன விதியில் இளநிலை பொறியாளர் பதவி உயர்வில் மேற்பார்வையாளர்களுக்கு இருந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள 95 சதவீத வரைவாளர் பதவிகளின் பணிகளை ஒர்க் அசிஸ்டண்ட்களே செய்து வருகின்றனர். கடந்த 2017 முதல் காலியாக உள்ள இளநிலை பதவிகளில் மேற்பார்வையாளர், ஒர்க் அசிஸ்டண்ட் பணியமர்த்தப்பட்டு அப்பணிகளை கவனித்து வருகின்றனர்.
இவர்களின் சேவைகளை பயன்படுத்திக் கொண்டுள்ள அரசு, இளநிலை பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்காமல் புறக்கணித்ததை ஏற்க முடியாது. இவ்விஷயத்தில் முதல்வர், பொதுப்பணித் துறை அமைச்சர், தலைமை செயலர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.