/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை
/
விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை
ADDED : அக் 31, 2024 05:46 AM
திருக்கனுார்: திருபுவனை தொகுதி சோரப்பட்டு, விநாயகம்பட்டு, வம்புப்பட்டு கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வளர்ச்சியை மேம்படுத்த முன்னாள் ராணுவ வீரர் பிரகாசம் மூலம் சுரக்ஷா சேவா பயிற்சி பள்ளி நடத்தப்படுகிறது.
இங்கு, சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த வீரர்கள் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் சீருடை பணி தேர்வுக்கான பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஆனால், அப்பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது உடற்தகுதியை வளர்த்துக் கொள்வதற்கான போதிய விளையாட்டு மைதானம் இதுவரையில் அமைக்கப்படவில்லை. இதனால் வேறுவழி இன்றி அவர்கள் சாலையோரங்களிலும், விவசாய நிலங்களிலும் பயிற்சி செய்கின்றனர்.
எனவே, சோரப்பட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

