தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/உள்ளூர் விளையாட்டுகளுக்கு அங்கீகாரம் வழங்க கோரிக்கை

உள்ளூர் விளையாட்டுகளுக்கு அங்கீகாரம் வழங்க கோரிக்கை

உள்ளூர் விளையாட்டுகளுக்கு அங்கீகாரம் வழங்க கோரிக்கை


UPDATED : நவ 11, 2026 07:33 PM

ADDED : நவ 11, 2026 07:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 07:33 PM ADDED : நவ 11, 2026 07:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம், தலைவர் வளவன் தலைமையில் நடந்தது.

நிர்வாகிகள் ராஜ், அன்புநிலவன், மூர்த்தி, அருள்ஜோதி, குமரன், அசோக், செந்தில்வேல் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விளையாட்டு வீரர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கான தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. விளையாட்டு துறைக்கு ஒதுக்கப்படும் பணம் முழுதும் அங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே முடியவில்லை. அதேபோல் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட புதுச்சேரி விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தால் விளையாட்டு சங்கங்களின் முழு பிரதிநிதித்துவம் இல்லாததால் எந்த ஒரு விளையாட்டு பணியும் மாநிலத்தில் நடைபெறாமல் உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் 45 ஆண்டுகளாக இயங்கி வந்த புதுச்சேரி விளையாட்டு கவுன்சிலை இந்த அரசு சட்டவிரோதமாக மூடியது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு துறையின் அங்கீகாரம் பெற்ற 65 சங்கங்களில் 30 விளையாட்டு சங்கங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நீக்கப்பட்டுள்ளன.

எனவே இதனை மறுபரிசீலனை செய்து மீண்டும் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் உள்ளூர் விளையாட்டுகளுக்கும் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us