/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மீன்கள் நிவாரணம் வழங்க கோரிக்கை
/
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மீன்கள் நிவாரணம் வழங்க கோரிக்கை
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மீன்கள் நிவாரணம் வழங்க கோரிக்கை
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மீன்கள் நிவாரணம் வழங்க கோரிக்கை
ADDED : டிச 07, 2024 07:13 AM
பாகூர்: ஏரி, குளம், உள்ளிட்ட நீர்நிலைகளில் வளர்க்கப்பட்டு வந்த மீன்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், நிவாரணம் வழங்க வேண்டும் என, மீன் வளர்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாகூரில், விவசாயம் மட்மின்றி, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு தொழில்களும் நடந்து வருகிறது. பட்டதாரிகள் பலர் மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிலர் சொந்தமாக நிலத்தில் குளம் வெட்டி பண்ணை அமைத்தும், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை குத்தகைக்கு எடுத்து மீன் வளர்த்து வருகின்றனர். மீன்கள் நன்கு வளர்ந்து விற்பனைக்கு தயராக இருந்தது. இந்நிலையில், தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஏரிகள், குளங்கள், தாங்கள், பண்ணை குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் வளர்க்கப்பட்ட மீன்கள் அடித்து செல்லப்பட்டன.
இதனால், மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
புயல் மழை மற்றும் வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்போருக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. ஆனால், மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு, நிவாரணம் அறிவிக்காமல் அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது.
கடன் வாங்கி மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டவர்கள் செய்வதறியாமல் உள்ளனர். எனவே, மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டவர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என, மீன் வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.