/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேளாண் இயக்குநரை நியமிக்க கோரிக்கை
/
வேளாண் இயக்குநரை நியமிக்க கோரிக்கை
ADDED : அக் 07, 2025 01:18 AM
புதுச்சேரி, ;வேளாண் இயக்குநரை உடனடியாக சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்க வேண்டுமென விசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து சங்கத் தலைவர் கீதநாதன் விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி வேளாண் துறை கடந்த இரண்டு மாதங்களாக இயக்குநர் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான நிலங்கள் அனைத்தும் மனைகளாக பிரிக்கப்பட்டு விட்டது.தற்போது இருக்கும் சிறிய நிலத்தை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகளை பாதுகாக்க வேளாண் துறை தவறி வருகிறது.பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப விதைகள் கொடுப்பதில்லை. சாகுபடிக்கு ஏற்ப உரங்கள், பூச்சி மருந்துகள் கிடைப்பதில்லை. வேளாண் இயக்குநர் நியமனத்தில் பி. பி. எஸ். கேடர் வேண்டும் என்று கவர்னர் கூறினார்.
முன்னாள் வேளாண் இயக்குநர் வசந்தகுமார் பி. பி. எஸ் கேடர் இல்லை.
எனவே, சீனியாரிட்டி அடிப்படையில் தகுதி வாய்ந்த இயக்குநரை உடனடியாக நிரப்ப வேண்டும். இல்லையெனில், விவசாயிகளை திரட்டி வேளாண் துறை இயக்குநர் அலுவலகம் முற்றுகையிடப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.