/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் கருத்து கேட்பு ரத்து செய்ய கோரிக்கை
/
கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் கருத்து கேட்பு ரத்து செய்ய கோரிக்கை
கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் கருத்து கேட்பு ரத்து செய்ய கோரிக்கை
கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் கருத்து கேட்பு ரத்து செய்ய கோரிக்கை
ADDED : அக் 30, 2024 04:44 AM
புதுச்சேரி, : கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 4ம் தேதி முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் நிறுவனர் மங்கையர் செல்வன் விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரிக்கான வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட அறிவிப்பாணை அடிப்படையில் 2018ல், கலெக்டர் தலைமையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பலர், குறைகளை தெரிவித்தனர்.
மக்களின் கருத்துகள் கடற்கரை மண்டல மேலாண் திட்ட வரைபடத் தில் இணைத்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்று இறுதி செய்யப்படும் என கலெக்டர் உறுதி அளித்தார்.
ஆனால், கடந்தாண்டு மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் வெளியிட்ட வரைபடங்களில், கலெக்டரின் உறுதிமொழிகள் இடம் பெறவில்லை.
இந்த குறைபாடுள்ள வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட அடிப்படையில், வரும் 6ம் தேதி நடத்த உள்ள கருத்து கேட்டு கூட்டரத்தை ரத்து செய்ய வேண்டும்.
இதனை வலியுறுத்தி வரும் 4,ம் தேதி காலை 10:00 மணிக்கு, புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

