/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடிக்க கோரிக்கை
/
பாகூர் பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடிக்க கோரிக்கை
பாகூர் பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடிக்க கோரிக்கை
பாகூர் பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடிக்க கோரிக்கை
ADDED : ஏப் 14, 2025 04:16 AM

பாகூர்:பாகூரில் அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாகூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், குரங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், தற்போது அதிகரித்து வருகிறது. அவை இப்பகுதியில் உள்ள மரங்களில் இருக்கும்காய், கனிகளை உண்டு வந்தன. தற்போது, கோடைகாலம் துவங்கி உள்ளதால் உணவு தேடி குடியிருப்பு, கடை வீதி பகுதிகளுக்கு படையெடுக்கின்றன.கடைகள், வீடுகளில் புகுந்து உணவு, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை பறித்து செல்கின்றன.விரட்ட முயன்றால், உறுமலுடன் கடிக்க பாய்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
எனவே, பாகூரில் அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனிடையே, பாகூர் போலீஸ் நிலையத்தின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பைக்கின் பெட்ரோல் டேங்க் கவரில் உணவுப் பொருட்களை தேடி சுட்டி தனம் செய்யும் குட்டிகுரங்கின் வீடியோ வைரலாகி வருகிறது.