/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்கலையில் மர்ம நபர் அத்துமீறல் விசாரணை குழு அமைக்க கோரிக்கை
/
பல்கலையில் மர்ம நபர் அத்துமீறல் விசாரணை குழு அமைக்க கோரிக்கை
பல்கலையில் மர்ம நபர் அத்துமீறல் விசாரணை குழு அமைக்க கோரிக்கை
பல்கலையில் மர்ம நபர் அத்துமீறல் விசாரணை குழு அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 15, 2025 12:19 AM
புதுச்சேரி : புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலையில் மாணவியிடம் மர்ம நபர்கள் அத்துமீறிய சம்பவத்தை பெண் ஐ.பி.எஸ்., தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அமைப்பின் தேசிய பொறுப்பாளர் கிருத்திகா நிருபர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலையில், கடந்த 11ம் தேதி மாலை 5:00 மணிக்கு அத்துமீறி நுழைந்த 4 நபர்கள், அங்கு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த முதலாமாண்டு மாணவியிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் பாலியல் தொல்லை தர முயன்றுள்ளனர். பின்னர். இதனை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளனர்.
அதன்பிறகு பாதிக்கப்பட்ட மாணவி முதலுதவிக்காக, பல்கலை நிர்வாக நபருடன் சென்று கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, பல்கலைக்கு திரும்பியுள்ளார்.
அந்த மாணவி வெளி மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் போலீசில் புகார் அளிக்க பயந்து, பல்கலை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்ற பல்கலை நிர்வாகம் அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, அந்த நிகழ்வையே திட்டமிட்டு மூடி மறைத்துள்ளது.
பல்கலை நிர்வாகம் யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது. மாணவி சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் எம்.எல்.சி., பதிவு செய்யாதது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும், பல்கலை விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் வரும் 21ம் தேதிவரை தேவையின்றி வெளியே வரக்கூடாது என வாய்மொழி உத்தரவிட்டிருப்பது ஏன் என்ற சந்தேகம் எழுகிறது. பல்கலையின் பாதுகாப்பின்மைக்கு காரணம் என்ன?
அதனால், இச்சம்பவம் குறித்து பெண் ஐ.பி.எஸ்., தலைமையில் சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். விசாரணை முடியும் வரை துணை வேந்தர் மற்றும் டீன் ஆகியோரை இடை நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க புதுச்சேரி அரசு செயல்பட வேண்டும் என பாரதீய வித்யார்த்தி பரிஷத் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.