/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
7வது ஊதியக்குழுவை அமல்படுத்த கோரிக்கை
/
7வது ஊதியக்குழுவை அமல்படுத்த கோரிக்கை
ADDED : ஜன 20, 2025 06:17 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டுமென,அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலாளர் முனுசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
மத்திய அரசு ஊழியர்களுக்கு, எட்டாவது ஊதியக்குழுவை அமைக்க ஒப்புதல் அளித்துள்ள பிரதமர உள்ளிட்ட மத்திய அமைச்சரவைக்கும், தொடர்ந்துபோராடிய மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர் தொழிற்சங்கங்கள், தேசிய ஓய்வூதியர் சங்கங்களுக்கு நன்றி.
எட்டாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டு, ஓராண்டுக்குள் அமுல்படுத்தநடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் புதுச்சேரி மாநிலத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட பல ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்தப்படாமல் உள்ளது.
மாநிலத்தில் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தாத அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் உடனடியாக ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்து.