sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை'

 'தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை'

 'தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை'


ADDED : பிப் 10, 2026 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 05:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகளை உடனே மேம்படுத்த அரசு உத்தரவிட வேண்டும் என நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

பிள்ளைச்சாவடியில் 1985ம் ஆண்டு துவங்கப்பட்ட பதுச்சேரி பொறியியல் கல்லுாரி, 2020ம் ஆண்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டு, பின்னடைவை சந்தித்து வருகிறது.

3000 மாணவர்கள் பயிலும் பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத சூழல் நிலவுகிறது. செயல்படாத உபகரணங்களைக் கொண்ட ஆய்வகங்கள், நவீன மற்றும் ஆராய்ச்சிக்கான எந்த இயந்திரமும் இல்லை.

மோசமான நிர்வாகத்தால் 40 ஆண்டுகள் பழமையான பல்கலைக்கழகம் தேசிய தரவரிசைப் பட்டியலில்,காரைக்கால் தேசிய தொழில்நுட்ப கல்லுாரியை விட பின் தங்கிய நிலையில் உள்ளது.

வகுப்பறையில் மாணவர்களுக்கு மத்தியில் நாய் அமர்ந்து இருப்பது, வளாகத்தில் பன்றிகள் மேய்வது, குப்பைகளை அகற்றாமல் இருப்பது மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஆகையால் மூடிய மேற்படிப்புகளை மீண்டும் துவங்கவும், மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு பல்கலைக் கழகத்தில் அடிப்படை வசதிகளை உடனே செய்து தர துணை வேந்தருக்கு அரசு உத்தரவிட வேண்டும். இல்லையெனில், பல்கலைக்கழக மாணவர்களுக்காக நமது மக்கள் கழகம், பொதுநல அமைப்புகள் சார்பாகவும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us