/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒப்பந்த ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை
/
ஒப்பந்த ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை
ADDED : செப் 07, 2025 11:14 PM
புதுச்சேரி: ஒப்பந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
கூட்டமைப்பு தலைவர் எட்வர்டு சார்லஸ் விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி சார்பில், நடந்த ஆசிரியர் தின விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை, எவ்வாறு பணி நிரந்தரம் செய்வது குறித்து தீவிரமாக ஆலோசிப்பதாக கூறியுள்ளார். அதனை ஆசிரியர்கள் கூட்டமைப்பு வரவேற்கிறது.
இந்த விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை விரைவில் பணி நிரந்தரம் செய்யவேண்டும்.
மேலும், ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்தால் மாணவர்களிடம் அந்த ஆசிரியர்களுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்காது என, முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆகையால், வரும் காலங்களில் அரசு ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிப்பதை தவிர்த்து, நிரந்தரமாக நியமிக்க கவர்னர், முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.