/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உப்பனாறு வாய்க்காலை துார்வாரிட கோரிக்கை
/
உப்பனாறு வாய்க்காலை துார்வாரிட கோரிக்கை
ADDED : செப் 04, 2025 03:09 AM
புதுச்சேரி : பருவ மழைக்கு முன்பாக, உப்பனாறு வாய்க்காலை துார்வாரிட வேண்டும் என மா.கம்யூ., கோரிக்கை விடுத்துள்ளது.
மா. கம்யூ., கோவிந்த சாலை கிளை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கிளை செயலாளர் செல்வராசு வரவேற்றார். கணேஷ் தலைமை தாங்கினார். நகர கமிட்டி செயலாளர் ஜோதிபாசு, மாநில குழு உறுப்பினர் சரவணன் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கோவிந்த சாலை பகுதியில் உள்ள உப்பனாறு கழிவுநீர் வாய்காலை, காமராஜ் சாலை முதல் மறைமலை அடிகள் சாலை வரை, பருவமழைக்கு முன் துார்வார வேண்டும். கோவிந்த சாலை முடக்கு மாரியம்மன் கோவில் பகுதியில் குடிநீர் குழாயில், கழிவுநீர் கலந்ததால் ஏற்பட்ட, சுகாதார சீர்கேடு காரணமாக பாதிக்கப்பட்ட 20 மேற்பட்டவர்கள் வாந்தி, விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களை மாற்றிட வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.