sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 30, 2026 ,சித்திரை 17, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 உழந்தை ஏரியை துார்வார கோரிக்கை

/

 உழந்தை ஏரியை துார்வார கோரிக்கை

 உழந்தை ஏரியை துார்வார கோரிக்கை

 உழந்தை ஏரியை துார்வார கோரிக்கை


ADDED : ஏப் 26, 2026 08:44 PM

Google News

ADDED : ஏப் 26, 2026 08:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உழந்தை ஏரியை கோடை காலத்திலேயே துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

உழவர்கரை நகராட்சிக்குட்பட முதலியார்பேட்டை, அரும்பார்த்தபுரம் பைபாசில் அமைந்துள்ள உழந்தை ஏரி நகரப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. சுமார் 165 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியில் தேங்கும் மழைநீர் காரணமாக குடிநீர் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஏரியில் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், ஏரி முழுதும் தண்ணீர் இன்றி வறண்டு வாய்க்கால் போல் காட்சியளிக்கிறது.

இதற்கிடையே, ஏரியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், தண்ணீர் இன்றி வறண்டு வரும் ஏரி பகுதிகளில் கொட்டப்பட்டு வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.

எனவே, உழந்தை ஏரியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், கோடை காலத்தை பயன்படுத்தி பொதுப்பணித் துறை அதிகாரிகள், மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக, ஏரியை முழுமையாக துார்வாரி அதிகப் படியான தண்ணீர் தேங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us