தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி - காரைக்காலுக்கு ரயில்கள் இயக்க கோரிக்கை

 புதுச்சேரி - காரைக்காலுக்கு ரயில்கள் இயக்க கோரிக்கை

 புதுச்சேரி - காரைக்காலுக்கு ரயில்கள் இயக்க கோரிக்கை


ADDED : ஜன 05, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி - காரைக்காலுக்கு ரயில்கள் இயக்க கோரி, வடதமிழ்நாடு அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க அமைப்பின் இணை செயலாளர் ரமேஷ், முதல்வரிடம் மனு அளித்தார்.

மனுவில், புதுச்சேரி - காரைக்கால் பகுதிகளுக்கு வணிகம், மருத்துவ சிகிச்சை, சட்ட சிக்கல்கள் மற்றும் காரைக்கால் துறைமுகத்தில் தொழில் போன்றவற்றிற்காக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.

இரண்டு நகரங்களுக்கும் ரயில் இணைப்பு இல்லாமல் உள்ளது. தினசரி இயக்கப்படும் புதுச்சேரி விழுப்புரம் பயன்பாட்டில் உள்ள ரயில், விழுப்புரம் சென்றடைந்த பின், செட்டில் நிறுத்தப்படுகிறது. இந்த ரயிலை, திருநள்ளாறு வழியாக காரைக்காலுக்கு நீட்டிக்க வேண்டும்.

மேலும், இந்த ரயிலை புதுச்சேரி - விழுப்புரம் வழியாக செல்லும் காரைக்காலுக்கு இயக்க வேண்டும். வணிகம், கல்வி, தொழில் மற்றும் புனித யாத்திரை போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக திருச்சி மற்றும் மதுரைக்கு தினமும் 500க்கும் மேற்பட்ட பயணிகள் புதுச்சேரியில் இருந்து பயணம் செய்கின்றனர்.

புதுச்சேரி - திருச்சி, மதுரை இணைக்கும் வகையில் ரயில்கள் இயக்க வேண்டும். புதுச்சேரி ரயில் நிலையத்தில் நடைமேடைகள் இல்லாததால் ரயில் சேவைகள் பெருமளவில் பற்றாக்குறையாக இருக்கிறது. மேலும், ஐந்தாவது நடைமேடை அமைக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us