/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புயல் நிவாரணம் ரூ.6 ஆயிரம் வழங்க கோரிக்கை
/
புயல் நிவாரணம் ரூ.6 ஆயிரம் வழங்க கோரிக்கை
ADDED : நவ 30, 2024 06:40 AM
புதுச்சேரி : புயல் நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளது.
அமைப்பின் நிறுவனர் மங்கையர்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த பட்ஜெட்டில் மீனவர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். ஆனால் மீனவர்களுக்கு மழைக்கால நிவாரணம் 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 4 நாட்களுக்கு மேலாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
எனவே மழைக்கால நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாயை முழுமையாக வழங்கிட வேண்டும்.
மழை, புயல் காலங்களில் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை கிரேன், டிராக்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களில் கொண்டு செல்வதற்கான செலவை அரசே ஏற்கும் என, அறிவிக்கப்பட்டது. எனவே மழை, புயல் காலங்களில் கடற்கரையில் உள்ள படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல ஏற்படும் செலவு தொகையினை உடனே வழங்கிட வேண்டும்.