தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசு வேலை வாய்ப்பிற்கான வயது வரம்பை உயர்த்த கோரிக்கை

அரசு வேலை வாய்ப்பிற்கான வயது வரம்பை உயர்த்த கோரிக்கை

அரசு வேலை வாய்ப்பிற்கான வயது வரம்பை உயர்த்த கோரிக்கை


UPDATED : அக் 31, 2026 07:21 PM

ADDED : அக் 31, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 07:21 PM ADDED : அக் 31, 2026 07:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு வேலை வாய்ப்பிற்கான வயது வரம்பை உயர்த்திட வேண்டும் என நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்தார்.

அவர், கவர்னர் மற்றும் முதல்வரிடம் அளித்துள்ள மனு;

புதுச்சேரி அரசு துறைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், பல துறைகளில் மக்களுக்கான அன்றாட பணிகள் பாதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் படித்த இளைஞர்களுக்கு வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்படாததால், லட்சக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப பூங்கா, பொருளாதார மண்டலம், மற்றும் தொழிற்சாலைகள் போன்ற கட்டமைப்புகள் இல்லாததால் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி நிற்கதியாக உள்ளனர். மேலும், பிள்ளைகளின் வேலை வாய்ப்புக்கான வயது வரம்பு கடந்து, அரசு வேலைவாய்ப்பு கனவு தகர்ந்து விடுவதால், அவர்களின் உயர் கல்விக்காக பெற்றோர்கள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் உள்ளனர்.

அரசு வேலைவாய்ப்புக்கான வயது தளர்வு அளிக்கப்படாததால், படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு கிடைக்காத விரக்தியில் தவறான வழிகளில் சென்று வாழ்க்கையை பாழாக்கி கொள்கின்றனர்.

தமிழக முதல்வர் அரசின் நேரடி வேலைவாய்ப்பு பெறுவதற்கான வயது வரம்பை 5 ஆண்டுகள் கூடுதலாக்கி உத்தரவிட்டுள்ளார். அதேபோல், புதுச்சேரி அரசும் வேலைவாய்ப்புக்கான வயது வரம்பை தளர்த்தி கூடுதலாக 5 ஆண்டுகள் அதிகரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us