தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க கோரிக்கை

 சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க கோரிக்கை

 சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க கோரிக்கை


ADDED : ஏப் 04, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் வில்லியனுார் சிக்கனல்களில் பசுமை நிழற்பந்தல் அமைக்க வில்லியனுார் லால்பகதுார் சாஸ்திரி சமூக சேவை மன்ற நிறுவனர் கலிய முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை:

புதுச்சேரி, வில்லியனுார் மற்றும் அரியாங்குப்பம் பகுதிகளில் அமைக்கப்பட் டுள்ள சிக்கனல்களில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் நலனை கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் அமைக்கும் பசுமை நிழற் பந்தலை உடனடியாக அமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர் வழக்கத்தை விட கூடுதல் வெட்ப அலை வீசும் என்பதால் பகலில் பொதுமக்கள் வெளியில வர வேண்டாம் என, அறிவித்துள்ளார்.

எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி புதுச்சேரியில் உள்ள அனைத்து சிக்கனல்கள், வில்லியனுார் எம்.ஜி.ஆர். சிலை சதுக்கம் , வில்லியனுார் கூடபாக்கம் புறவழிச்சாலை சிக்கனல், அரியாங்குப்பம் புறவழிச் சாலை சிக்னல்களில் பசுமை நிழற்பந்தல் அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us