/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குரூப் 'சி' பணிக்கு வயது தளர்வு கவர்னருக்கு கோரிக்கை
/
குரூப் 'சி' பணிக்கு வயது தளர்வு கவர்னருக்கு கோரிக்கை
குரூப் 'சி' பணிக்கு வயது தளர்வு கவர்னருக்கு கோரிக்கை
குரூப் 'சி' பணிக்கு வயது தளர்வு கவர்னருக்கு கோரிக்கை
ADDED : அக் 16, 2025 11:29 PM
புதுச்சேரி: குரூப் 'சி' பணிக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்க வேண்டும் எனக் கோரி, பட்டதாரி இளைஞர்கள் கவர்னருக்கு மனு அளித்துள்ளனர்.
மனுவில், 'அரசு இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்குடன் காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. இருப்பினும், தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் செய்யும் தவறால் தொடர்ந்து வினாத்தாள்களில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகி றது. இது இளைஞர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள து.
எனவே, தேர்வு கட்டுப் பாட்டாளரை மாற்றம் செய்து, திறமையான, நேர்மையான ஒருவரை நியமித்து, போட்டி தேர்வு களை நடத்த வேண்டும்.
மேலும், இந்த அரசு அமைவதற்கு முன், 10 ஆண்டாக அரசு பணிக்கான ஆட்கள் தேர்வு நடக்கவில்லை. இதனால் இளைஞர்கள் பலர் வயதாகி பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே ஒருமுறை வயது தளர்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வயது தளர்வு அளிக்க அரசிற்கு அதிகாரம் இல்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்டதில், வயது தளர்வு அளிக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என, தெரிய வந்துள்ளது.
எனவே கடத்த ஆட்சியின் தவறால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு ஒரு முறை வாய்ப்பு அளிக்கும் வகையில் தாங்கள் குரூப் 'சி' பணிக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.