மினி விளையாட்டரங்கம் அமைக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை
மினி விளையாட்டரங்கம் அமைக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை
UPDATED : அக் 24, 2026 06:56 PM
ADDED : அக் 24, 2026 06:54 PM

அ நிறம் | அளவு
காரைக்கால்: திருப்பட்டினம், நெடுங்காடு தொகுதிகளில் மினி விளையாட்டு அரங்கம் அமைக்க மத்திய அமைச்சரிடம் எம்.எல்.ஏ.,க்கள் விக்னேஸ்வரன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
நெடுங்காடு தொகுதியில் மினி விளையாட்டரங்கம் அமைக்க வேண்டும் என, டில்லியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து, விக்னேஸ்வரன் எம்.எல்.ஏ., கோரிக்கை மனு அளித்தார்.
இதேபோல் திருப்பட்டினம் தொகுதியில் நான்கு இடங்களில் மினி விளையாட்டு அரங்குகள் அமைக்க வேண்டும் என, மீனாட்சிசுந்தரம் எம்.எல்.ஏ., மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் கோரிக்கை மனு அளித்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தார்.
