ADDED : ஆக 31, 2026 08:47 AM

புதுச்சேரி: நுகர்வோர் மக்கள் நீதிமன்றத்தில் 4 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மத்திய அரசு நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் தேசிய நுகர்வோர் பூசல்கள் குறைதீர்வு ஆணைய வழிகாட்டுதலின்படி, நுகர்வோர் புகார்களை கால நேரத்திற்குள் தீர்வு காணும் நோக்கில், புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில், மக்கள் நீதிமன்றம் நடந்தது.
மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் முத்துவேல் தலைமையில் உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் அடங்கிய அமர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் இருந்து, 11 வழக்குகள் சமாதானத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டு,4 வழக்குகளில் உடன்படிக்கை ஏற்பட்டு தீர்வு காணப்பட்டது.
புதுச்சேரி, 2வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெயந்தி பங்கேற்று, முறையீட்டாளர்களுக்கு ரூ. 98 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் தேவராமநாதன், விஸ்வசுந்தரம், கணேஷ், அய்யப்பன், தேவசேனாதிபதி, தண்டபாணி, சிவபிரகாஷ், ரம்யா உள்ளிட்ட சட்டக் கல்லுாரி மாணவர்கள், காப்பீட்டு நிறுவன மற்றும் பொதுத்துறை வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை நுகர்வோர் குறை தீர்வு ஆணைய பதிவாளர் விஜயா ரவிந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
