/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம்: சட்டசபையில் 15ம் முறையாக நிறைவேற்றம்
/
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம்: சட்டசபையில் 15ம் முறையாக நிறைவேற்றம்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம்: சட்டசபையில் 15ம் முறையாக நிறைவேற்றம்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம்: சட்டசபையில் 15ம் முறையாக நிறைவேற்றம்
ADDED : ஆக 15, 2024 04:32 AM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு, சட்டசபையில் 15ம் முறையாக நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுச்சேரி சட்டசபை கடந்த மாதம் 31ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கியது. கடந்த 2ம் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்தும், பட்ஜெட் மீதும் விவாதம் நடந்து வந்தது.
இறுதி நாளான நேற்று புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், செந்தில்குமார், நேரு ஆகியோர் தனி நபர் தீர்மானங்களை முன்மொழித்து பேசினர்.
இறுதியில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், 'புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெற்றே தீர வேண்டும் என எம்.எல்.ஏ.,க்கள் உணர்வு பூர்வமாக பேசினர். தீர்மானங்கள் மூலம் மாநில அந்தஸ்து கேட்டு வலியுறுத்துவோம். பிரதமர், உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம்.
மாநில அந்தஸ்து தொடர்பாக, பிற மாநில எம்.பி.,க்களிடம் வேண்டுகோள் வைப்போம். மாநில அந்தஸ்தினை பெற்றே தீர்வோம். எனவே இதனை அரசு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்' என்றார்.
இதையடுத்து எம்.எல்.ஏ.,க்கள் கொண்டு வந்த மாநில அந்தஸ்திற்கான தனிநபர் தீர்மானங்கள் திரும்ப பெறப்பட்டன.
தொடர்ந்து மாநில அந்தஸ்து கேட்டு அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
சபாநாயகர் செல்வம் பேசுகையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசினை இந்த சட்டசபை வலியுறுத்துகிறது. இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றார்.
பின்னர், காலை 11:40 மணியளில் சட்டசபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. ஏற்கனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு 14 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது 15ம் முறையாக மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.