ADDED : ஆக 22, 2025 03:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:புதுவை தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு, நிறுவப்பட்ட நாள் முதல், மாதம் தோறும் மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வு நடந்து வருகிறது.
இந்த மாத நிகழ்ச்சிக்கு, தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் அருள்செல்வம் தலைமை தாங்கினார். உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேல் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
திருக்குறள் கூறிய பிரசிடென்சி பள்ளி மாணவிகளுக்கு நுால்களைப் பரிசாக வழங்கினார். நிகழ்ச்சிக்கு, தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலாளர் பாலசுப்ரமணியன், சங்க துணைத் தலைவர் திருநாவுக்கரசு, துணை செயலர் தினகரன், பொற்செழியன், ||எட்வர்டு சார்லஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.